கன்னி (Kanni)

Virgoமாதாந்த இராசி பலன்கள் - 14 Jan 2020 - 14 Feb 2020

கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் இது வரை இருந்து வந்த பிரச்சனைகள், குழப்பங்கள் தீரும். உடல் நலம் பலம் பெரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். எடுக்கும் காரியங்கள், செய்யும் செயல்கள் யாவற்றிலும் சிறு, சிறு தடைகளும், தாமதங்களும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சியில் முன்னேற்றம் உண்டு. பொருளாதாரம் வளம் பெருகும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. வாகன பராமரிப்பு செலவுகளும் அதிகரிக்கும். வீண் மனக்குழப்பங்களும் எதிர்பாராத பயணங்களும் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். பெற்றோர் வழியில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் பிரச்சனை ஓரளவு சீராகும். குடும்ப வாழ்க்கையில் சில தீடிர் திருப்பங்கள் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் பண விரையம் ஏற்பபடும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். வெளியிடங்களுக்கு செல்லும் போதும் இரவு நேரங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. உத்யோகத்தில் வேலை பளு குறையும். தொழில், வியாபாரத்தில் வரும் போட்டிகள் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் : 4,5,6 & 31 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

இராசியான தேதிகள்

May

குரு பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசி நேயர்களே, இது வரை 3-ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் 29-10-2019 முதல் 4-ம் இடத்திற்கு செல்கிறார். 4-ம் இடத்தில் அமரும் குரு சுமாரான பலன்களை தான் தருவார் என்பதால் கெடுதல் ஏதும் சிம்ம ராசிக்கு இல்லை. 4-மிடம் குருவால் பெரிய நன்மைகள் ஏதும் இல்லாவிட்டாலும் பிரச்சனைகள் ஏதும் வராது. நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீரும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிடையே நெருக்கும் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாலித்தினருடன் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய நபர்களிடம் பழகும் போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடைய துவங்கும். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆராய்ந்து செயல்படும் திறன் ஓங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். வண்டி, வாகனங்களை புதிதாக வாங்க முடியும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்வீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். காதல், திருமண விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். கடன் வாங்கவோ,கொடுக்கவோ வேண்டாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு நல்ல படியாக நடைபெறும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிடையே சண்டை, சச்சரவு வராமல் பார்த்துக்கொள்ளவும். சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். உத்யோகத்தில் இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி விட முயற்சியின் பேரில் வெற்றி பெரும் வகையில் அமையும்.

இராசி உறவு நிலைகள்

கன்னி ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம். கன்னி ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், தனுசு மற்றும் கும்பம்.

சிறப்பான தொழில்

குழுவாக வேலை செய்ய விரும்பும் நபர்கள் கன்னி ராசிக்காரர்கள். எதையும் கட்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என எண்ணுவார்கள். எழுத்தாளர், ஆசிரியர், கணக்காளர், விமர்சகர், தரவு ஆய்வாளர் போன்ற வேலைகளில் இவர்கள் சிறந்து காணப்படுவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன். எனவே புதனின் சக்தியை கூட்டுவதற்கு, ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.

Rasi Palan 2019 (இன்றைய ராசி பலன்)