சிம்மம் (Simmam)

Leoமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

ராசிநாதன் சூரியனின் தன ஸ்தான அமர்வு நிலையோடு இந்த மாதத்தினைத் துவக்க உள்ள உங்களுக்கு பொருளாதார சிக்கல்கள் தீரும். இயற்கையில் அதிக தன்னம்பிக்கையைக் கொண்ட நீங்கள் இந்த மாதத்தில் செயல்வெற்றியைக் காண உங்கள் பேச்சுத்திறனை அதிகம் நம்புவீர்கள். ‘ஆடிய மாட்டை ஆடிக் கறக்கணும், பாடிய மாட்டைப் பாடிக் கறக்கணும்’ என்ற எண்ணத்தோடு அன்புடன் பேச வேண்டியவர்களிடம் அன்புடனும், அதிகாரமாகப் பேச வேண்டியவர்களிடம் அதிகாரமாகவும் பேசி உங்கள் காரியத்தினை சாதித்துக் கொள்வீர்கள். ராசிநாதனின் இரண்டாம் இடத்துச் சஞ்சார நிலை பேசும் வார்த்தைகளின் மூலம் உங்கள் செயல் வெற்றியை உறுதி செய்யும். அடுத்தவர்களின் முகத்திற்கு நேராகப் பேசும் பழக்கத்தினைக் கொண்ட நீங்கள் தெளிவான கருத்துக்களை வெளிப்படுத்தி உங்களைச் சுற்றியுள்ளவர்களை பிரமிப்பிற்கு உள்ளாக்குவீர்கள்.

குடும்பத்தில் இருந்துவரும் சலசலப்பிற்கு முடிவு காண்பீர்கள். உடன்பிறந்த சகோதரியால் நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் சிறப்பான நற்பயனைப் பெற்றுத் தரும். மாதத்தின் மத்தியில் சிறிது தூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிரயாணத்தின்போது உடன் பயணிப்போருடன் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மாணவர்களின் சிந்தனைத்திறன் உயர்வு காணும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மறைமுக எதிரிகளால் சற்று சிரமத்திற்கு ஆளாக நேரிடும். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு துணை நிற்க வேண்டியிருக்கும். தர்ம காரியங்கள், ஆன்மிகப் பணிகளுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினைக் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் நல்ல லாபத்தினைக் காண்பார்கள். தொழில் ரீதியாக புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். இரவினில் கனவுத் தொல்லைகளால் அவதிப்பட நேரிடும். மற்றபடி நற்பலன்களைக் காணும் மாதமே.

பரிகாரம்:  சரஸ்வதி தேவியை வணங்கி வர வெற்றி சாத்தியமாகும்.

இராசியான தேதிகள்

September 2,8,9,11,14,16,24,28,29,31

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

அர்தாஷ்டம சனி விலகி விட்டது. அப்பாடா விட்டது தொல்லை என்று நிமிர்ந்து உட்காருங்கள். இப்பொழுது பஞ்சமஸ்தானமான 5-ம் இடத்திற்கு சனி பகவான் வந்து விட்டார். கேந்திராதிபதி திரிகோணத்தில் அமர்ந்து விட்டான். வாட்டி வதைத்த பிரச்னைகள் தீர்ந்து விடும். வதங்கிய பயிறும் வளர ஆரம்பிக்கும். இனி எப்படி போவது? எல்லாம் முட்டு சந்தாக இருக்கிறதே? என்ற கவலை இல்லை. நல்ல காலம் வந்துவிட்டது. பிறகென்ன? உங்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் படைத்தவர்கள் தாமே முன்வந்து உதவி செய்வார்கள். உங்கள் திட்டம் கச்சிதமாக முடியும். குடும்பத்தில் சச்சரவுகள், குழப்பம் இருந்தாலும் தீர்ந்து விடும். பஞ்சை எடுத்தாலே கையில் நூலாக மாறி விடும். போன சனிப்பெயர்ச்சியில் பட்ட கஷ்டங்கள் அடேங்கப்பா கொஞ்சமா நஞ்சமா? இனி அதுபோல் கஷ்டங்கள் வராது. இனி என்னென்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டு நிறைவேற்ற நினைத்தீர்களோ அத்தனையும் அருமையாக செய்து முடிப்பீர்கள். பஞ்சம சனி, வேலை, தொழில், திருமண விஷேசங்கள் அத்தனையும் தருவதோடு, சிலருக்கு குழந்தை பாக்கியமும் கொடுக்கும். வாழ்க்கையே பாதகம் என்று வெறுத்து இருந்த உங்களுக்கு இனி வாழ்க்கையே சாதகம்தான்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் நீல நிறம் கலந்த வஸ்திரத்தை தானம் செய்யுங்கள். வியாழக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். உங்கள் நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானம் செய்யுங்கள். சனி பகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

இராசி உறவு நிலைகள்

சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – துலாம், மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் தனுசு சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம்.

சிறப்பான தொழில்

தலைமை குணம் மற்றும் எளிதாக மற்றவரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். தனியாக எதையும் செய்து முடிக்க முனையும் பக்குவம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை ஆள விரும்பமாட்டார்கள். முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுய தொழில், அரசியல் போன்றவற்றில் இவர்கள் சிறந்து செயல்படுவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். எனவே சூரியனின் வலிமையை அதிகரிக்க சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.

எழுதப்பட்ட நாள் .

நலம் உண்டாகட்டும்
-சுபம்-

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)