சிம்மம் (Simmam)

Leoமாதாந்த இராசி பலன்கள் - 14 Jan 2020 - 14 Feb 2020

சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் நண்பர்கள், உறவினர்கள் வருகை அதிகம் உண்டு. எதிர்பாராத தன வரவுகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். முக்கிய காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஏப்பிரச்னைகளையும் சமாளிக்கும் மனதைரியம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் யோகம் அமையும். அலைச்சல்களும், உடல் உழைப்பும் அதிகமாகவே இருக்கும். எக்காரியத்தையும் செய்து முடிப்பதில் பொறுமையும், நிதானமும் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பழைய கடனை அடைக்க புது வழி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெற முடியும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்கள் இனிதே அமையும். உங்களுக்கு பிரச்னையை கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வர். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு மனநிறைவரை தரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும். சந்திராஷ்டமம் : 1,2,3,4 & 29,30,31 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

இராசியான தேதிகள்

June

குரு பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசி நேயர்களே, இது வரை 4-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 29-10-2019 முதல் 5-ம் இடத்திற்கு செல்கிறார். 5-ம் இடம் என்பது குருவிற்கு சிறப்பான ஒரு இடம். 5-மிடம் குருவால் இந்த வருடம் நிறைய நன்மைகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். காரிய தடை நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் வரும். மனதில் தோன்றும் புதுமையான எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி பெற முடியும். உங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும். உடலிலும் மனதிலும் புது தெம்பு பிறக்கும். எங்கும் எப்போதும் உற்சாகமாக இருக்க முடியும். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புது வண்டி, வாகனம் வாங்க முடியும். திருமண காரியம் கைகூடும். சுப செலவுகள் கூடுதலாகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பழைய சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உங்களை எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். வெளியூர் பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். குடும்ப பெரியோர்களின் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையற்ற மருத்துவ செலவுகள் வரும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற மனக்குழப்பமும், சஞ்சலமும் உங்கள் மனதிற்கு சங்கடங்களை ஏற்படுத்தும். இறைவழிபட்டால் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கையும் ஒரு சிலருக்கு அமையும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் மீண்டும் வந்து பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். உத்யோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். இந்த குருபெயர்ச்சியில் பல நன்மைகளும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களும் ஏற்படும்.

இராசி உறவு நிலைகள்

சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – துலாம், மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் தனுசு சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம்.

சிறப்பான தொழில்

தலைமை குணம் மற்றும் எளிதாக மற்றவரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். தனியாக எதையும் செய்து முடிக்க முனையும் பக்குவம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை ஆள விரும்பமாட்டார்கள். முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுய தொழில், அரசியல் போன்றவற்றில் இவர்கள் சிறந்து செயல்படுவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். எனவே சூரியனின் வலிமையை அதிகரிக்க சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.

எழுதப்பட்ட நாள் .

நலம் உண்டாகட்டும்
-சுபம்-

Rasi Palan 2019 (இன்றைய ராசி பலன்)