மீனம் (Meenam)

Piscesமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

புரட்டாசி மாதத்திய கிரஹ நிலை சற்று கூடுதலான செலவினங்களால் உங்களை அலைக்கழிக்கும் வகையில் அமைந்துள்ளது. எடுப்பார் கைப்பிள்ளையாக இராமல் சுயபுத்திக்கு வேலை கொடுப்பது நல்லது. உடனிருப்போரைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும். எட்டாம் இடத்தின் வலிமை கூடுவதால் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். தன ஸ்தானாதிபதி செவ்வாயின் சாதகமான நிலை தொடர் பொருள் வரவினைத் தந்து கொண்டிருந்தாலும் வரவிற்கேற்ற செலவுகளும் வரிசையில் காத்து நிற்கும். உங்களிடம் பணஉதவி கேட்டு உறவினர்கள் வரக்கூடும். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் கருத்துக்கள் அடுத்தவர்களுக்கு சிறந்த ஆலோசனையாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கத்தினைக் காண நேரிடும்.

உடன்பிறப்புடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். அவரது செயல்பாடுகள் உங்களுக்கு மன வருத்தத்தினைத் தரும் வகையில்  அமையலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் தக்க சமயத்தில் பயனற்றுப் போவதால் சிறிது சிரமத்திற்கு ஆளாவீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சிறிது சிரமம் காண்பார்கள். ஞாபக மறதியைத் தவிர்க்க எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. மனதில் குடிகொள்ளும் ஒருவித விரக்தியான மனோ பாவத்தினைக் களைய தனிமையைத் தவிர்ப்பது நல்லது.பிள்ளைகளின் செயல்வேகத்தினால் உண்டாகும் வெற்றி உங்களை பிரமிப்பிற்கு உள்ளாக்கும்.

அவர்களால் உங்களது கௌரவம் உயரும் நேரம் இது. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆடம்பரம் கருதி செய்யும் அநாவசிய செலவுகள் அதிகரிக்கக் கூடும். செல்போன், டிஜிட்டல் கேமரா போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களினால் பொருளிழப்பு உண்டாகலாம். கலைத்துறையினர் தங்கள் படைப்புகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டி வரும். தொழில்முறையில் தைரியமாக செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். கூட்டுத்தொழில் செய்வோர் கவனத்துடன் கணக்கு வழக்குகளை கையாள்வது நல்லது. இந்த மாதத்தில் நடைபெற உள்ள குருப்பெயர்ச்சி உத்யோகஸ்தர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நற்பலன்கள் அதிகமாகவும், மாற்றுப் பலன்கள் குறைவாகவும் இருக்கும் மாதம் இது.

பரிகாரம்: ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வணங்கி வாருங்கள்.

இராசியான தேதிகள்

September 1,3,5,8,10,12,15,16,18,19,22,26,28,29,30

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

உங்களுக்கு சனி லாபாதிபதி. லாபாதிபதி 10-ல் இருப்பது வெகு விஷேசம். விரயஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், இதுநாள்வரை பீடித்த நோய் உங்களை விட்டு விலகி விடும். மனகுழப்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வாகனம், வீடு அமையும். எப்பொழுது சொந்த வீடு அமையும்? என்று ஏங்கியவர்களுக்கு சொந்த வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்யும் யோகம் வந்துவிட்டது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும். திருமணமான உங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். போகாத கோயில் இல்லை என்று திருமண வரனுக்காக சுற்றி வந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை அமையும். பொன், பொருள் சேரும். ஆனால், சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால் வீண் விவகாரம் செய்ய வேண்டாம். மனதில்பட்டதை பேசுவதை தவிர்க்கவும். 10-ம் இட சனி பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். கையில் இருக்கும் வைரத்தை வைத்துக் கொண்டு கண்ணாடி கல்லை தேட வேண்டாம். அதாவது, தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வந்த சனிபகவான், உங்களை பாக்கியசாலி, யோகசாலியாக்கும். 

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயர் பாடல்களை பாடுங்கள். ஸ்ரீஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.  சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும். நல்வாழ்த்துக்கள்!

இராசி உறவு நிலைகள்

மீன ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம். மீன ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு.

சிறப்பான தொழில்

கற்பனை மற்றும் படைப்பு திறன் கொண்டவர்கள் மீனம் ராசிக்காரர்கள். மக்கள் தொடர்பு சார்ந்த வேலைகளில் சிறந்து செயல்படுவார்கள். உளவியல், மக்கள் மேலாண்மை, கலை போன்றவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

எழுதப்பட்ட நாள் .

நலம் உண்டாகட்டும்
-சுபம்-

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)