கும்பம் (Kumbam)

Aquariusமாதாந்த இராசி பலன்கள் - 14 Sep 2018 - 14 Oct 2018

இந்த ஆவணி மாதத்தில் ராசிநாதன் சனி பகவானின் பலம் துணையிருப்பதால் எதையும் தாங்கும் இதயத்தினைப் பெற்றிருப்பீர்கள்.  ஜீவனாதிபதி செவ்வாய் 12ல் கேதுவுடன் இணைந்திருப்பதால் சற்று சிரமத்தினை எதிர்கொள்ள உள்ளீர்கள். குருவின் பார்வை பலம் தர்ம சிந்தனைகளை மனதில் அதிகரிக்கச் செய்யும். பொதுக்காரியங்களில் முன் நின்று செயல்பட வேண்டிய சூழலை உருவாக்கும். பிடிவாதக்காரர்களாகிய நீங்கள் இந்த மாதத்தில் சற்று விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையைக் கொண்டிருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவெடுக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பொருள் வரவு சீராக இருந்துவரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துக்கள் அதிகமாக இடம்பிடிக்கும். உடன் பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் சற்று சிரமத்தினைத் தரும் வகையில் அவ்வப்போது பழுதாகி நிற்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் கிட்டும்.

அதே நேரத்தில் அவற்றின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். கடன்பிரச்னைகள் சற்றே தலைதூக்கும். ஆவணி மாதத்தின் பிற்பாதியில் உறவினர்களோடு மனஸ்தாபம் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சற்று சிரமத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளால் ஒரு சில விவகாரங்களில் கூடுதல் செலவினை சந்திக்க நேரலாம். சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் உண்டாகும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் உயரும். கலைத்துறையினர் எதிர்பாராத தடைகளால் சற்று மன வருத்தத்திற்கு ஆளாவார்கள். செப்டம்பர் முதல் வாரத்தில் தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பார்கள். முன்னேற்றத்திற்காக முயற்சிக்க வேண்டிய மாதம் இது.

பரிகாரம்: பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு வாருங்கள்.

இராசியான தேதிகள்

August 2,3,14,15,18,19,20,24,29,30

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு லாப சனியாக வந்துவிட்டது. அதாவது, சனிபகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்திற்கு வந்துவிட்டார். இனியெல்லாம் யோகமே. தொட்டது துலங்கும். ஜென்ம இராசியையும், பஞ்சமத்தையும், அஷ்டமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், ஆண்டி போல் அலைந்தவர்கள் அரசனை போல் வாழப்போகிறீர்கள். ஆம், ஜென்மாதிபதி ஜென்மத்தை பார்வை செய்வதால் கஷ்டங்கள், நஷ்டங்கள் அத்தனையும் நடா புயல் போல் ஓடி விடும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். உத்தியோகத்தில் சிரமம், பளு குறையும். சிலருக்கு தொழில் துவங்கவும் வசதி ஏற்படும். கடன் பிரச்னை தீரும். பொதுவாக, மனக்குழப்பங்கள் அத்தனையும் தீர்ந்து விடும். தூரத்து உறவினரின் உதவி கிடைக்கும். தெய்வ பணிகள் அதிகரிக்கும். பேச்சில் மட்டும் நிதானம், பொறுமை தேவை. சகோதர உறவில் மகிழ்ச்சி ஏற்படும். வில்லங்கமான சொத்துக்கள் விஷயத்தில் சுமுகமாக பேசி முடிக்கும் சூழ்நிலை உருவாகும். கணக்கு-வழக்கில் கவனம் தேவை.

இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சர்வலோக நாயகனை வணங்குங்கள். சோமவாரத்தில் (திங்கள்கிழமை) வில்வ இலை சமர்பியுங்கள். உங்களால் முடிந்த ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

இராசி உறவு நிலைகள்

கும்ப ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு. கும்ப ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் கன்னி.

சிறப்பான தொழில்

புதிய ஐடியாக்களை வெளிப்படுத்துவது, எதிர்கால நோக்கத்துடன் செயல்படுவதில் இவர்கள் வல்லவர்கள். ஒரே வேலையில் ஈடுபட விரும்பமாட்டார்கள். தொழில் புரிவது, கலை, கண்டிபிடிப்பு போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

வழிபட வேண்டிய தெய்வம்

கும்ப ராசியை ஆளும் கிரகமும் சனி தான். எனவே செவ்வாயின் பலத்தை அதிகரிக்க சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனத்துடன், மனதார சிவனை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.

எழுதப்பட்ட நாள் .

நலம் உண்டாகட்டும்
-சுபம்-

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)