துலாம் (Thulaam)

Libraமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

ராசிநாதன் சுக்கிரனின் ஆட்சி பலம் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறத் துணை நிற்கும். எடுத்த காரியங்கள் ஏதேனும் ஒரு வகையில் வெற்றி பெறும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களில் உறுதியாக நிற்பீர்கள். மனதில் மகிழ்ச்சி நிலவி வரும். அக்டோபர் 2ம் தேதி முதல் ராசியில் இணைவு பெறும் புதன் விவேகமான சிந்தனைகளைத் தருவார். உங்கள் மனதில் இருந்து வரும் நெடுநாளைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். ஆடம்பரச் செலவுகள் அதிகமானாலும் அதைப் பற்றிக் கவலைப்படாது குடும்பத்தினரின் சந்தோஷம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவீர்கள். செலவிற்கேற்ற வகையில் வரவு நிலை தொடர்வதால் சிரமம் ஏதும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பேசும் வார்த்தைகளில் பிடிவாதம் கலந்த சொற்கள் அதிகமாக வெளிப்படலாம். நமக்கு சரி என்று தோன்றும் கருத்துக்கள் அடுத்தவர்களுக்கு தவறாகப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது. உடன் பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சற்று சிரமத்தினைத் தரக்கூடும்.வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் உயர்வு பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உறவினர்களின் வருகையால் கூடுதல் செலவுகளுக்கு ஆளாவீர்கள்.

பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் அவர்களோடு கருத்து வேறுபாட்டினைத் தோற்றுவிக்கும். அவர்களது எதிர்காலம் பற்றிய சிந்தனை மனதை அதிகம் ஆக்கிரமிக்கும்.வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு பக்கபலமாக துணை நிற்பீர்கள். ஆன்மிகத்தின் பெயரால் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு உண்டென்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தொழில் முறையில் உங்களின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் எதிர்பார்க்கும் வெற்றியைப் பெற்றுத் தரும். புதிதாக தொழில் ஆரம்பிக்க உள்ளவர்களுக்கு நேரம் சாதகமாக உள்ளது. உத்யோகஸ்தர்கள் மாதத்தின் கடைசி வாரத்தில் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். கலைத்துறையினரின் மனதில் வெற்றிக்கான நம்பிக்கை துளிர்விடும். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பரிகாரம்: வெள்ளிதோறும் அன்னை உமையபார்வதியை வழிபட்டு வாருங்கள்.

இராசியான தேதிகள்

August 2,3,5,9,12,14,18,19,22,24,28,29,31

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

இத்தனை நாள் பாத சனியில் இருந்து படாதபாடுபட்ட நீங்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். சனிபகவான் 3-ம் இடத்திற்கு வந்துவிட்டார். பஞ்சமஸ்தானம், பாக்கியஸ்தானம், விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும். வாடகை வீட்டில் வசதியில்லாமல் இருந்த நீங்கள், இனி சொந்த வீட்டில் குடிபோக போகிறீர்கள். சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது. குழந்தை பேறு உண்டாக, சனிபகவான் அருள் செய்வார். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். வங்கி உதவிகளும் தாராளமாக கிடைக்கும். நிதான பேச்சே வெற்றி தரும். பெற்றோருக்கு இருந்த மனக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். 12-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், தேவை இல்லாமல் செலவுகள் வரத்தான் செய்யும். வெளிநாட்டில் வேலை செய்து வருபவர்கள் சற்று சிரமமாகத்தான் இருப்பார்கள். சரி, சிரமம் இல்லாமல் சிகரம் ஏற முடியுமா? பஞ்சமஸ்தானத்தை அதாவது சனி, தன் சொந்த வீட்டை பார்வை செய்வதால், திக்கு தெரியாத காட்டில் இருந்து ஊருக்குள் வந்துவிட்டீர்கள். இனி யோக வாழ்க்கைதான்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! ஆனைமுகனை வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள். விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

இராசி உறவு நிலைகள்

துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம். துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – கடகம், மகரம் மற்றும் மீனம்.

சிறப்பான தொழில்

துலாம் ராசிக்காரர்கள் துடிப்பானவர்கள். மக்களை டீல் செய்வதில் வல்லவர்கள். வாடிக்கையாளர் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு, மேலாண்மை போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)