கடகம் (Kadagam)

Cancerமாதாந்த இராசி பலன்கள் - 14 Jan 2020 - 14 Feb 2020

கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப சுபச்செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை வெகுவாக உயரும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். வீடு மனை சம்பந்தமான இடங்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடையே இருந்த பிரச்சனைகள், மனசங்கடங்கள் யாவும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு சந்தோஷத்தை தரும். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். பெண்கள் வகையில் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வெளியிடங்களில் மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சந்திராஷ்டமம் : 26,27,28,29 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

இராசியான தேதிகள்

June

குரு பெயர்ச்சி பலன்கள்

கடக ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்த குரு பகவான் 29-10-2019 முதல் 6-ம் வீட்டிற்கு செல்கிறார். (6-ம் இடம் மறைவு ஸ்தானம்) 6-ம் இடத்து குரு காரியங்களில் தடங்களை ஏற்படுத்தும். 6-ல் குரு அமருவது சிரமம் என்றாலும் அவரது சிறப்பு பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பொருளாதார நிலையில் பிரச்சனை ஏதுமின்றி தன வரவு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். ஆன்மீக பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். திட்டமிட்டு செய்யலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் சிறு சிறு சண்டைகள் உண்டாகலாம். பயணங்கள் சாதகமான பலன் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். சுப காரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனை சரியாகும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பட்ட கஷ்டங்கள் மறைந்து ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பணம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். விட்டில் திருமண பேச்சு தொடங்கும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்களால் மனக்கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். புதிய கடனை மேற்கொண்டு வாங்காமல் இருப்பது நல்லது. புதியவர்களை நம்பி எந்த முடிவையும் எடுக்கவேண்டாம். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதையும் கூடும். பண வரவு அதிகரிப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வண்டி, வாகனத்தை சீர் செய்வீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கும், இருப்பினும் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை தீரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. உத்யோகத்தில் அலுவலுக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். தொழில், வியாபாரம் நன்றாகவே நடக்கும். தொழில், வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த குருப்பெயர்ச்சி நிறைய செலவுகளையும், வீண் அலைச்சல்களையும் தந்தாலும் வெற்றி பெறுவது உறுதி.

இராசி உறவு நிலைகள்

கடக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம். கடக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், துலாம் மற்றும் தனுசு.

சிறப்பான தொழில்

கடக ராசிக்காரர்கள் இயற்கையை விரும்பும் நபர்கள். சந்தோசமான சூழலுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள். கால்நடைமருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், மனித வள ஆர்வலர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். எனவே சந்திரனின் வலிமையை அதிகரிக்கும் கடவுள் கௌரி அம்மன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

Rasi Palan 2019 (இன்றைய ராசி பலன்)