தனுசு (Dhanusu)

Sagittariusமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

ராசிநாதன் குரு பகவானின் பெயர்ச்சி நிலை அக்டோபர் நான்காம் தேதி முதல் போராடி வெற்றி காண வேண்டிய நிலையைத் தோற்றுவிக்கும். ஜென்மச் சனியின் சஞ்சாரம் மனதின் மூலையில் ஒரு சில குழப்பங்களை உண்டாக்கும். சிரமத்தினைத் தரக்கூடிய 12ம் வீட்டில் குருவின் பிரவேசம் அமைய உள்ளதால் அதிகப்படியான அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரஹங்களின் சஞ்சார நிலை உங்களது மன விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைத்ததை நடத்தி முடிக்கும் 11ம் இடத்தின் வலிமையினால் எடுத்த காரியங்களில் சிறப்பான வெற்றி கண்டு வருவீர்கள். 7, 10க்குடைய புதனும் 11ல் தனகாரகன் சுக்கிரனோடு இணைவதால் வாழ்வியல் தரம் உயரும்.

புதிய நண்பர்களின் சேர்க்கை உங்களுக்கு பொருளாதார ரீதியாக உயர்வினைத் தரும். பெண்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு சிறந்த ஆலோசனையாக அமையும். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்பட்டு பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் தீர்வு காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். மாணவர்கள் கடுமையான உழைக்க வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களின் விருப்பத்திற்கு மாறானதாக அமையலாம்.

சிந்தனையில் இருப்பவற்றை உடனடியாக செயல்படுத்தாது நேரம் காலம் உணர்ந்து செயலில் இறங்குவது நல்லது. பொதுப்பிரச்னைகளில் விவேகமான செயல்பாடுகள் நற்பெயரைப் பெற்றுத் தரும்.சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடன் பிரச்னைகள் கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணை உங்கள் வெற்றிக்கு உறுதுணையாய் செயல்படுவார். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம்  நற்பெயரும், தனக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களிடம் அவப்பெயரும் காண நேரிடும். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபம் காண்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்துக் காத்திருந்த தனலாபம் வந்து சேரும். நன்மை தரும் மாதம் இது.

பரிகாரம்: கிருத்திகை நாளில் விரதம் இருந்து ஆறுமுகனை வணங்கி வாருங்கள்.

இராசியான தேதிகள்

July 3,8,9,11,14,15,18,21,22,27,29,30,31

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

சனிபகவான் உங்கள் ஜென்மத்தில் வந்தமர்ந்து விட்டான். அய்யோ சாமி… ஏற்கனவே ஏழரை சனி. தீராத குறைக்கு ஜென்ம சனியுமா? என்று பயப்பட வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வந்துள்ளதால், கெடுதல் செய்ய மாட்டார். கீர்த்திஸ்தானம், சப்தமஸ்தானம், ஜீவனஸ்தானத்தை சனிபார்வை செய்வதால், சகோதர-சகோதரிகளுக்கு யோக காலம்தான். உங்களுக்கு திருமணம் தடைப்பட்டு வந்திருந்தால் இனி கவலையில்லை. திருமணம் பிரமாதமாக நடந்து விடும். போட்டி-பந்தயங்களில் வெற்றி கொடுக்கும். பங்கு முதலீட்டில் சிறிய இலாபம் கிடைக்கும். திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை பார்வை செய்வதால் பெரிய முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். அவசரம் பரபரப்பு அடைய வைக்கும். பலநாட்களாக வாகனத்தை மாற்ற வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும். திருமணம் ஆனவர்கள் மனைவியின் உடல்நலனில் சற்று கவனம் தேவை. துணைவருக்கு சிறு,சிறு பிரச்னைகள் வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் நன்றாக அமையும். பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று பலமாக வீசும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! அஞ்சனை மைந்தனை வணங்குங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, சனிபகவானையும் சனிக்கிழமையில்  வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

இராசி உறவு நிலைகள்

தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், துலாம், சிம்மம் மற்றும் கும்பம். தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மீனம்.

சிறப்பான தொழில்

தீர்கமான முடிவுகளை எடுப்பதில் தனுசு ராசிக்காரர்கள் சிறந்து செயல்படுவார்கள். நல்ல எண்ணத்தை தன்னை சுற்றி இருக்கும் இடங்களில் பரப்ப செய்வார்கள். மக்கள் தொடர்பு, திரைப்படம் ஃ தெலைக்காட்சி, ஆசிரியர், போன்ற பணிகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)