மீனம் (Meenam)

Piscesமாதாந்த இராசி பலன்கள் - 14 Jan 2020 - 14 Feb 2020

மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எடுக்கும் காரியங்கள் மற்றும் செயல்கள் யாவற்றையும் மற்றவர்களின் துணையில்லாமல் இனிதே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபிட்சங்கள் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கவலைகளும், கடன்களும், கஷ்டங்களும் விலகும். குடும்ப சேமிப்பை உயர்த்த முடியும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். விஐபிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உடல் நலம் பொறுத்தவரை தொந்தரவுகள் எதுவும் இருக்காது. வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு முயற்சி செய்யும் காரியங்கள் தாமதமின்றி வெற்றி பெரும். குடும்பத்தில் மருந்து மாத்திரைக்கு செலவு செய்ய வேண்டிவரும். எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களிடம் இருக்கும். உத்தியோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

இராசியான தேதிகள்

October

குரு பெயர்ச்சி பலன்கள்

மீன ராசி நேயர்களே, இது வரை 9-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 29-10-2019 முதல் 10-ம் இடத்திற்கு செல்கிறார். பொதுவாக 10-இடத்து குரு நன்மை செய்ய மாட்டார் என்பது ஒரு பொதுவான கருத்து. இருப்பினும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு நடக்க வேண்டிய பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. புது பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாலத்தினரிடம் கவனமாக பழகுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். கணவன் மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். சொந்த வீடு அமையும் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் கொடுத்த கடனை திரும்ப பெறுவது கடினம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் தேவை. விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உற்றார், உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உடல் நலம் சீராகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு உள்ளவர்களாக திகழ முடியும். வருமானம் பல வழிகளில் வந்து சேரும். வரும் எதிர்ப்புகள் தானாக விலகும். புது வீடு மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த மன நிம்மதி கிடைக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு நீங்கும். குல தெய்வ வழிபாடு தாமதன்றி நிறைவேற்ற முடியும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பெரியோர் அறிவுரை கேட்டு நடப்பது அவசியமாகிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உத்யோகத்தில் சாதுரியமான பேச்சு மூலம் நிறைய சாதிக்க முடியும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வரும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். மீன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியுடன் மற்ற கிரக சஞ்சாரத்தையும் வைத்து பார்க்கும் போது நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

இராசி உறவு நிலைகள்

மீன ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம். மீன ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு.

சிறப்பான தொழில்

கற்பனை மற்றும் படைப்பு திறன் கொண்டவர்கள் மீனம் ராசிக்காரர்கள். மக்கள் தொடர்பு சார்ந்த வேலைகளில் சிறந்து செயல்படுவார்கள். உளவியல், மக்கள் மேலாண்மை, கலை போன்றவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

எழுதப்பட்ட நாள் .

நலம் உண்டாகட்டும்
-சுபம்-

Rasi Palan 2019 (இன்றைய ராசி பலன்)