கன்னி (Kanni)

Virgoமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

ராசியில் அமர்ந்திருக்கும் சூரியனின் நிலை இந்த மாதத்தில் சிறிது மனசஞ்சலத்தை உருவாக்கலாம். ஒவ்வொரு காரியத்தையும் செய்து முடிக்க அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். ஆயினும் ராசிநாதனின் சாதகமான நிலையால் மனக்கிலேசத்தை தூர ஒதுக்கி வைத்துவிட்டு செயலில் இறங்குவீர்கள். மனதில் நிலவி வரும் குழப்பத்தினை முகத்தில் வெளிக்காட்டாது புன்னகையுடன் அடுத்தவர்களிடம் பழகி வருவீர்கள். ஸ்திரமற்ற மனோ நிலையின் காரணமாக அநாவசிய குழப்பத்திற்கு ஆளாவீர்கள். எதிலும் ஒருவித சந்தேக மனநிலை இருந்து வரும். பிடிவாத குணத்தினை தளர்த்திக் கொள்வது நல்லது. இதுநாள் வரை இருந்து வந்த பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பீர்கள். அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து பொருள் வரவு துவங்கும்.

பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவி வரும்.  உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் உண்டாகும். முன் பின் தெரியாத நபர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லதல்ல. தகவல் தொடர்பு சாதனங்கள் அநாவசியப் பிரயாணத்தினைத் தவிர்க்கும் வகையில் பயன் தரும். வண்டி, வாகனங்களால் செலவுகள் கூடும். தாயார் வழி உறவினர்களால் தர்மசங்கடமான சூழலைச் சந்திக்க நேரிடும். மாணவர்கள் ஞாபகமறதிப் பிரச்னையால் அதிகம் அவதிப்படுவார்கள்.

பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். பல்வலி, மூட்டுவலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஆகியவற்றால் உடல்நிலையில் சிரமம் காண நேரிடலாம்.  வாழ்க்கைத்துணையின் பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் உருவாகக் கூடும். தொழில்முறையில் கலைத்துறையினரின் திறமையான பேச்சுக்கள் சிறப்பான லாபத்தினைப் பெற்றுத் தரும். உத்யோகஸ்தர்கள் அனுசரணையான குணத்தின் மூலம் நற்பெயர் காண்பார்கள். முற்பாதியில் சிரமத்தினையும் பிற்பாதியில் நற்பலன்களையும் அனுபவிக்கும் மாதம் இது.

பரிகாரம்: ஞான தட்சிணா மூர்த்தியை வணங்கி வாருங்கள்.

இராசியான தேதிகள்

September 1,2,3,6,9,10,11,14,16,18,22,25,26,28,30

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

உங்களுக்கு சனி பகவான் உங்கள் இராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்து, அர்தாஷ்டம சனியாகிவிட்டான். சிலர் பயமுறுத்துவார்கள் ஆனாலும் பயப்பட வேண்டாம். பஞ்சமாதிபதி 4-ம் இடத்தில் அமர்ந்துவிட்டதால் கெடுதல் செய்ய மாட்டான். 6-ம் இடத்தையும், 10-ம் இடத்தையும், உங்கள் ஜென்மத்தையும் சனி பார்வை செய்வதால், ரோக நிவர்த்தி ஆகும். இதுவரை வட்டிக்கு வட்டி கட்டிக்கொண்டே இருந்த நீங்கள், இனி அசலையும் கொடுத்து கடனை அடைத்து விடுவீர்கள். பலநாட்களாக வேலைக்கு அலைந்தவர்கள் புதிய வேலையில் அமர்ந்து விடுவார்கள். விழுந்த தொழிலை புதுப்பிப்பீர்கள். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உட்கார நேரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வேலைகள் வந்த வண்ணம் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் அத்தனையும் வாங்கி கொடுத்து அவர்களை திருப்திப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வந்துவிடும். கண்ணில் காசையே பார்க்க முடியவில்லை என்று ஏங்கியவர்கள், கை நிறைய காசு என்று சந்தோஷப்படுவீர்கள். இதை நான் சொல்லவில்லை சனி பகவான் செய்து காட்டபோகிறார். 

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள். சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள். பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.

இராசி உறவு நிலைகள்

கன்னி ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம். கன்னி ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், தனுசு மற்றும் கும்பம்.

சிறப்பான தொழில்

குழுவாக வேலை செய்ய விரும்பும் நபர்கள் கன்னி ராசிக்காரர்கள். எதையும் கட்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என எண்ணுவார்கள். எழுத்தாளர், ஆசிரியர், கணக்காளர், விமர்சகர், தரவு ஆய்வாளர் போன்ற வேலைகளில் இவர்கள் சிறந்து காணப்படுவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன். எனவே புதனின் சக்தியை கூட்டுவதற்கு, ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)