மிதுனம் (Midhunam)

Geminiமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

ராசிநாதன் புதனின் சாதகமான சஞ்சாரம் உங்களின் சிந்தனைத் திறனை வலுப்பெறச் செய்யும். எண்ணங்களில் உதிக்கும் நற்சிந்தனைகள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும். அடுத்தவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். தனாதிபதியின் ஏற்றத்தாழ்வான நிலை சற்று சிரமத்தினைத் தருவதால் கையிருப்பு கரையத் தொடங்கும். குடும்பத்தில் சலசலப்புகளுக்கு இடையில் கலகலப்பான சூழலும் இருந்து வரும். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் கடுமை உங்களின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கலாம். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் பிரயாணத்தின் போது செயலிழக்கும் வாய்ப்பு உள்ளதால் சற்று சிரமத்திற்கு உள்ளாவீர்கள். உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும்.

குடியிருக்கும் வீட்டினில் ஒரு சில மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். புதிய ஃபர்னிச்சர் சாமான்கள் வீட்டினில் சேரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகை தர்மசங்கடமான சூழலை உருவாக்கும். கேளிக்கை, விருந்து கொண்டாட்டங்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றில் மனம் அதிக ஈடுபாடு கொள்ளும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் மனம் மகிழத்தக்க சம்பவங்கள் நிகழும். அவர்களின் செயல்பாடுகள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் உடல்நிலையில் சிரமத்தைக் காண நேரலாம்.

எட்டாம் இடத்தின் வலிமை அநாவசிய செலவுகளைத் தோற்றுவிக்கும். ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். மாணவர்கள் சகமாணவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிரிகளால் ஒரு சில தொல்லைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களில் ஒரு சில பிரச்னைகள் தோன்றி மறையும். தொழில்முறையில் கலைத்துறையினரின் எண்ணங்கள் வெற்றி பெறும். உத்யோகஸ்தர்கள் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். சரிசம பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.

பரிகாரம்: வெள்ளிதோறும் துர்கையம்மனை வணங்கி வாருங்கள்.

இராசியான தேதிகள்

September 3,4,7,8,10,22,26,29,31

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

இதுநாள்வரையில் 6-ம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்போது 7-ம் இடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இராசிக்கு 9-க்குரிய சனி, 7-ல் வந்திருப்பது நன்மையே தரும். பொதுவாக பாக்கியாதிபதி, சப்தமஸ்தானத்திற்கு வந்தால் என்ன பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு. உயர்கல்வி அமையும். அடமானத்தில் இருந்த பொருட்கள் கைக்கு வந்து விடும். புதிய வாகனம் வாங்கக்கூடிய சாதகமான நேரம் இது. ஆனாலும், ஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று பதற்றம் அதிகரிக்கும். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சோமவாரத்தில் (திங்கள் கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

இராசி உறவு நிலைகள்

மிதுன ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – துலாம், மேஷம், சிம்மம் மற்றும் கும்பம். மிதுன ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – விருச்சிகம், மகரம் மற்றும் மீனம்.

சிறப்பான தொழில்

இவர்கள் ஒரே இடத்தில் அன்றாடம் செய்யும் சலிப்பான வேலைகளை செய்வதில் நாட்டம் காண்பிக்கமாட்டார்கள். வெளியிடங்களுக்கு சென்று சுற்றி சுற்றி செய்யும் வேலைகளே இவர்கள் விரும்புவர்கள். டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டட வடிவமைப்பாளர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

புதனின் சக்தியை கூட்டுவதற்கு, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். எனவே வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)