விருச்சிகம் (Viruchigam)

Scorpioமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

கடந்த சில நாட்களாக சற்று சிரமத்தினை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அமையும் குருபகவானின் பெயர்ச்சி நிலை புதிய உத்வேகத்தினைத் தரும். நினைத்த காரியங்களை உடனுக்குடன் செய்து முடிக்கும் வலிமை கிட்டும். ஜென்ம குருவின் துணையோடு ஏழரைச் சனியினால் உண்டாகியுள்ள தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர்கள். ராசியில் வந்து அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்களை சதா தூண்டிக்கொண்டே இருப்பார். சும்மா இருக்கப் பிடிக்காது ஏதேனும் ஒரு காரியத்தை செய்துகொண்டேயிருப்பீர்கள். தன ஸ்தானாதிபதியாகிய குருவின் நிலை பொருளாதார முன்னேற்றத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பேசும் வார்த்தைகளில் நீதி, நேர்மை, நியாயம் பற்றிய கருத்துக்கள் அதிகமாக இடம்பெறும்.

பொதுப்பிரச்னைகளில் முன் நின்று குரல் கொடுப்பீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் பகலில் அடிக்கடி செயலிழந்து சிரமத்தினைத் தரக்கூடும். மாணவர்களின் கல்வி நிலை சிறக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். முன்பின் தெரியாத நபர்களை நம்பி புதிய முயற்சியில் ஈடுபடுதல் கூடாது. வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கலாம். பிள்ளைகளின் செயல்களை பெருமையோடு பேசி வருவீர்கள். அவர்களது வாழ்வினில் சுபநிகழ்வு களுக்கான ஏற்பாடுகளை செய்ய நேரிடும்.

வாழ்க்கைத்துணையின் பிடிவாதமான செயல்கள் உங்களின் விருப்பத்திற்கு எதிரானதாக அமையலாம். அவரால் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கக் காண்பீர்கள். நண்பர்களின் துணையோடு நீண்ட நாள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில்முறையில் தனித்திறமையின் காரணமாக நற்பெயர் எடுப்பீர்கள். ஆயினும் விரும்பிய தனலாபத்தை அடைய மாதத்தின் இறுதி வாரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் நேர்மைக்கும் திறமைக்கும் உரிய பலனைக் காண்பார்கள்.கலைத்துறையினர் கடுமையான அலைச்சலை சந்திப்பார்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பரிகாரம்: நவராத்திரி நாட்களில் அன்னதானம் செய்து வாருங்கள்.

இராசியான தேதிகள்

September 1,3,5,8,10,12,15,16,19,21,25,28,30,31

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

இதுநாள்வரை ஜென்மத்தில் இருந்த சனி உங்களை விட்டு விலகி விட்டான். அதாவது, தலையில் சுமந்து வந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டீர்கள். தற்காலம் சனி 2-ம் இடத்திற்கு வந்திருப்பதால் கைக்கு கை பணம் கிடைத்து பையை நிரப்பும். சுகஸ்தானத்தை சனிபகவான் பார்வை செய்வதால், தீராத வியாதியும் தீர்ந்து விடும். இனி டாக்டர் வீட்டுக்கு அலையவேண்டியதில்லை.  தடைபட்ட கல்வி தொடர வாய்ப்பு வரும். பழைய வீட்டை புதுபிக்கும் நேரம் வந்து விட்டது. புதிய வாகனம் வாங்கும் உண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். மேலதிகாரியிடம் கவனமாக இருக்க வேண்டும். புண்ணியஸ்தலங்களுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும். 9-ம் இடத்திற்கு 12-ல் சனி பார்வைபடுவதால், பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள் காட்டும். புதவி உயர்வு வரவில்லை என்று ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும் என்பார்களே என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. சனி பகவான், சுக்கிரன் சாரத்தில் வந்ததால் கெடுக்காது – நல்லவற்றை வாரி கொடுக்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வையுங்கள். சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவாலயத்திற்கு சென்று இறைவனை வணங்குங்கள். சனிபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 8 முறை உச்சரித்து வாருங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கியும் வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

இராசி உறவு நிலைகள்

விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம். விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மிதுனம், சிம்மம் மற்றும் கும்பம்.

சிறப்பான தொழில்

இவர்களிடம் உள்ளுணர்வு மற்றும் படைப்புத்திறன் அதிகமாக இருக்கும். எதையும் சொந்தமாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மருத்துவம், விஞ்ஞானி, துப்பறியும் துறை, வழக்கறிஞர், ஆராய்ச்சி, ஊடகம் போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாக செயலாற்றுவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

செவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சிவனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)