கும்பம் (Kumbam)

Aquariusமாதாந்த இராசி பலன்கள் - 14 Jan 2020 - 14 Feb 2020

கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் எழும் கேள்விகளுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும். எதிலும் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டியது அவசியம். பொருளாதாரத்தில் திருப்பு முனை உண்டாகும். குடும்பத்தில் சுப கரையங்கள் அதிகம் நடைபெறும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறும் சூழ்நிலை உருவாகும். இது வரை நிறைவேறாத காரியங்கள் மற்றும் தங்களின் ஆசைகள் இனிதே நிறைவேறும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்கள் புகழ், கௌரவம் செல்வாக்கு உயரும். உற்றார், உறவினர் வருகை அதிகம் உண்டு. குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கூடும். வெளிநாட்டு தொடர்புகள் கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகவார்கள். வெளியிடங்களில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. உடன்பிறப்புகளிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம், எச்சரிக்கை தேவை. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் ஒவொன்றாக வந்து சேரும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும். சந்திராஷ்டமம் : 15,16,17 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

இராசியான தேதிகள்

June

குரு பெயர்ச்சி பலன்கள்

கும்ப ராசி நேயர்களே, இதுவரை இருந்து 10-ம் இடத்தில் இருந்து வந்த 29-10-2019 முதல் 11-ம் இடத்திற்கு செல்கிறார். (11-ம் இடம் என்பது லாப ஸ்தானம்) 11-ம் இடத்தில் குரு அமர்வது மிகவும் விசேஷமான பலனை தரும். குரு பகவான் 11-ம் இடத்திற்கு வருவது பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். உங்கள் அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். மற்றவர்கள் செய்கையால் கோபம் ஏற்படலாம். பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். வெளியூரிலிந்து நல்ல தகவல்கள் வரும். கணவன் மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைக்கவும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்கை தரம் உயர ஆரம்பிக்கும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். குடும்ப நலனில் அக்கறைகொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பொருளாதார விஷயத்தில் முழு கவனம் செலுத்தவும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உடன்பிறந்தோர் உற்ற துணையாக இருப்பர். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் எப்பொழுதுமே சந்தோஷம் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அனுகூமுறையால் தீர்வு கிடைக்கும். விலகி நின்ற நண்பர்கள் மீண்டும் வந்து நட்பு பாராட்டுவர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அனாவசிய செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்க முடியும். உடன்பிறந்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். உடல் நிலையும், மனநிலையும் மிகவும் தெளிவாகவும், உற்சாகத்துடன் இருக்கும். உங்களுடைய எண்ணங்கள், திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். புதிதாக திருமண ஆனவர்களுக்கு சீக்கிரத்தில் புத்திர பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்கள் கடுமையான முயற்சியால் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்க முடியும். எதிரிகளின் இடையூறுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உத்யோக தொடர்பாக நிறைய அலைய வேண்டியிருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் பற்றிய யோசனை வரும். இந்த குரு பெயர்ச்சியில் நல்லது, கெட்டதும் கலந்து நடப்பதால், சுமாரான பலன்களே எதிர்பார்க்கலாம்.

இராசி உறவு நிலைகள்

கும்ப ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு. கும்ப ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் கன்னி.

சிறப்பான தொழில்

புதிய ஐடியாக்களை வெளிப்படுத்துவது, எதிர்கால நோக்கத்துடன் செயல்படுவதில் இவர்கள் வல்லவர்கள். ஒரே வேலையில் ஈடுபட விரும்பமாட்டார்கள். தொழில் புரிவது, கலை, கண்டிபிடிப்பு போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

வழிபட வேண்டிய தெய்வம்

கும்ப ராசியை ஆளும் கிரகமும் சனி தான். எனவே செவ்வாயின் பலத்தை அதிகரிக்க சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனத்துடன், மனதார சிவனை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.

எழுதப்பட்ட நாள் .

நலம் உண்டாகட்டும்
-சுபம்-

Rasi Palan 2019 (இன்றைய ராசி பலன்)