மகரம் (Magaram)

Capricornமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

முக்கியமான கிரஹங்களின் சாதகமான சஞ்சார நிலையோடு இந்த மாதத்தினைத் துவக்க உள்ளீர்கள். இந்த மாதத்தில் உண்டாக உள்ள தொழில்முறை முன்னேற்றத்தினால் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரக் காண்பீர்கள். ராசிநாதன் சனிபகவான் 12ல் இருந்தாலும், ஜீவன ஸ்தானத்தில் புதன் மற்றும் சுக்கிரன்  இருவரும் இணைந்து உங்கள் உழைப்பின் பெருமையை மற்றவர்கள் உணரச் செய்வார்கள். 9ம் இடத்தில் பகை கிரஹமான சூரியன் இணைவு பெறுவதால் உடனிருப்போர் மனதில் பொறாமை எண்ணம் உண்டாகலாம். நம் மீது அதிகாரம் செய்பவர்களைக் கண்டால் மனதிற்குள் கோபம் உண்டானாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும்.

புதிய நண்பர்களின் இணைவு தொழில் மாற்றத்தை உண்டுபண்ணும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். பொறியியல் துறை மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ போன்றவற்றில் வெற்றி அடைவர். குடும்ப விவகாரத்தில் உறவினர் ஒருவரின் தலையீடு சிறிது குழப்பத்தினைத் தோற்றுவிக்கலாம். பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடித்து வாருங்கள்.மனதில் அவ்வப்போது தத்துவார்த்த சிந்தனைகள் முக்கிய இடத்தினைப் பிடிக்கும். ஆன்மிக விவகாரங்களில் தேடுதல் அதிகரிக்கும்.

வாழ்க்கைத்துணையின் வேகமான செயல்பாடுகள் சிறிது மன வருத்தத்தினைத் தோற்றுவித்தாலும் இந்தக் காலத்தில் இப்படி இருந்தால்தான் சமாளிக்கமுடியும் என்று எண்ணுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் விரயம் உண்டாகக் கூடும். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். தொழில்முறையில் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் குணத்தினால் நல்லதொரு முன்னேற்றம் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினை அடைவார்கள். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை உடனுக்குடன் காண இயலும். கலைத்துறையினர் எதிர்பார்த்துக் காத்திருந்த பெரிய வாய்ப்பு தற்போது வந்து சேரும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு விசா முதலான பிரச்னைகள் தீரும். நற்பலன்களை அனுபவித்து உணரும் மாதம் இது.

பரிகாரம்: மஹாளய அமாவாசை நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்

இராசியான தேதிகள்

August 2,9,15,18,21,22,26,29,30

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

வந்துவிட்டது ஏழரை சனி என்று பயந்துவிடாதீர்கள். பயமுறுத்த பலர் இருப்பார்கள். உங்களுக்கு வந்தது ஏழரைதான் ஆனால் சுக்கிரன் சாரத்தில் வந்திருப்பதால் நன்மைகளை அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது சனிபகவான் கொடுப்பான். ஆனால் கெடுக்க மாட்டான். ருண-ரோகஸ்தானம், தனஸ்தானம், பாக்கியஸ்தானத்தை சனி பார்வை செய்வதால் கடன் சுமை நீங்கும். இதுநாள்வரை இறப்பர் போல் இழுத்துக் கொண்டு இருந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்.  குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கி விடுவீர்கள். உங்கள் வாக்கு மேன்மை பெறும். உடல்நலனில் மட்டும் கண்டிப்பாக கவனம் தேவை. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகள் சில நேரங்களில் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். பயணங்கள் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். மனைவியால் லாபம் உண்டு. மனைவியின் ஆலோசனை சரியாக இருக்கும். வாகனம் ஓட்டுவதில் கவனமும் பொறுமையும் தேவை. 12-ம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் கவலையில்லை. இந்த ஏழரை உங்களுக்கு வளமையும், பெருமையும் தரும். 

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை வணங்குங்கள். வீட்டில் ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு வைத்து வணங்குங்கள். சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

இராசி உறவு நிலைகள்

மகர ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கன்னி, மகரம் மற்றும் மீனம். மகர ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் துலாம்.

சிறப்பான தொழில்

நேரம் கடைபிடிப்பது, பணத்தை சரியாக முதலீடு செய்வது போன்றவற்றில் மகர ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். இவர்களுக்கு ஏற்ற பணிகள், மேலாளர்கள், ஆசிரியர், வங்கி, அரசு வேலைகள், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் போன்றவை ஆகும்.

வழிபட வேண்டிய தெய்வம்

மகர ராசியை ஆளும் கிரகம் சனி. எனவே இந்த கிரகத்தின் வலிமையை சிவபெருமான் அதிகரிப்பார். ஆகவே மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)