கடகம் (Kadagam)

Cancerமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

நவகிரஹங்களின் சாதகமான சஞ்சார நிலையோடு புரட்டாசி மாதத்தினைத் துவக்க உள்ளீர்கள். உங்களின் கனவுத் திட்டங்களை செயலில் நடைமுறைப்படுத்த ஏதுவான காலமாக அமையும். ஏழாம் இடத்து கேதுவால் ஒரு சில இடைஞ்சல்கள் இருந்தாலும் அவற்றைக் களையும் முறையை அறிந்திருப்பீர்கள். சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரனால் சிறப்பான பொருள் வரவினைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். கௌரவச் செலவுகள் அதிகரிப்பதால் பொருளாதார ரீதியாக சற்று தேக்க நிலை உண்டாகலாம். கையிருப்பு கரையும் வாய்ப்பு உண்டு. முகமலர்ச்சியோடு உரையாடினாலும் பேசும் வார்த்தைகளில் கண்டிப்புடன் கூடிய கறார் கருத்துக்கள் வெளிப்படக்கூடும். உடன்பிறந்தோர் உங்களின் கௌரவம் காக்கும் வகையில் செயல்படுவார்கள்.

தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். மாதத்தின் மத்தியில் எதிர்பாராத பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் கௌரவத்தை உயர்த்தும். முன்பின் தெரியாத பெண்களிடம் எச்சரிக்கையுடன் பழக வேண்டியது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களின் துணையுடன் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்ற கால நேரம் ஏதுவாக அமையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சம்பந்தப்பட்ட கடனுதவித் தொகைகள் கிடைப்பதில் சாதகமான நேரம் நிலவி வரும்.

நிலுவையில் உள்ள கடன் பிரச்னைகளை முடிவிற்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் சற்று மன வருத்தத்தினைத் தோற்றுவிக்கலாம். அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க நேரிடும். வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கும். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில்முறையில் செயல்வேகம் அதிகரிக்கக் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் லாபம் காண்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த விருதும் பாராட்டும் வந்து சேரும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பார்கள். அதிகப்படியான பொறுப்புகளை சுமப்பதால் ஓய்வு நேரம் குறையலாம். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பரிகாரம்: சனிதோறும் ஸ்ரீநிவாஸப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்.

இராசியான தேதிகள்

September 1,8,9,11,13,15,18,19,20,22,26,29,30

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

உங்கள் இராசிக்கு 6-ம் இடத்திற்கு சனி பகவான் வந்துவிட்டார். நினைத்ததை நடத்தி வைப்பான் சனி பகவான். நீங்கள் போடும் திட்டங்கள் அத்தனையும் வெற்றிதான். 6-ம் இடத்தில் அமர்ந்த சனி 9-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும் பார்வை செய்வதால் விரோதிகள், விரோதங்கள் பஞ்சு போல் பறந்து விடும். இதுநாள்வரை இருந்த வீண் விரயங்கள் இனி இருக்காது. பணவரவு தாராளமாக இருக்கும். 3-ம் இடத்தை பார்வை செய்வதால் தைரியலஷ்மியே உங்கள் வசம்தான். புதிய தொழில் பெரிய அளவில் அமையும். வெளிநாட்டு பயணமும், வெளிநாட்டவர்களால் லாபமும் உண்டு. தூங்கி  கொண்டு இருந்தவர்களை இனி 6-ம் இடத்து சனி பகவான் தட்டி எழுப்புவான். புதிய நண்பர்களால் மிகுந்த ஆதாயம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெறும். சுபநிகழ்ச்சிக்காக கடன் வாங்க வைக்கும். ஆகவே திட்டமிட்டு செலவு செய்யுங்கள். வேலைக்கு அலைந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொதுவாக, 8-க்குரிய சனி 6-ம் இடத்தில் அமர்ந்ததால், கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம் என்பதற்கேற்ப இனி உங்களுக்கு இராஜயோக வாழ்க்கைதான்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! ஸ்ரீரங்கநாதரை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் புளியோதரை சாதத்தை 8 பேருக்கு தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

இராசி உறவு நிலைகள்

கடக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம். கடக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், துலாம் மற்றும் தனுசு.

சிறப்பான தொழில்

கடக ராசிக்காரர்கள் இயற்கையை விரும்பும் நபர்கள். சந்தோசமான சூழலுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள். கால்நடைமருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், மனித வள ஆர்வலர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். எனவே சந்திரனின் வலிமையை அதிகரிக்கும் கடவுள் கௌரி அம்மன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)