மேஷம் (Mesham)

Ariesமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

விரைவாகவும், சுறுசுறுப்புடனும் சதா செயல்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் இந்த மாதத்தில் சற்று நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். ராசிநாதன் செவ்வாய் கேதுவின் இணைவினைப் பெற்றதோடு அல்லாமல் எட்டாம் இடத்திற்கு குரு பகவான் வந்து அமர உள்ளதால் அநாவசியமான அலைச்சலை சந்திக்க நேரலாம். எதிர்பார்த்திருந்த காரியங்கள் தடைபடக்கூடும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கக் கண்டு மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். பொருளாதார சூழல் ஏற்றம் தரும் வகையில் அமையும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பீர்கள். உங்களை நம்பி வந்தோருக்காக கூடுதலாக செலவழிக்க நேரிடலாம். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள்.

புதிய நண்பர்களுடனான சந்திப்பு மனதிற்கு நிம்மதியைத் தரும். மாதத்தின் முற்பாதியில் வண்டி, வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். உறவினர்களின் வழியில் ஒரு சில கலகங்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் செயல்கள் மன மகிழ்ச்சியைத் தரும் வகையில் அமையும். கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுது போக்கு அம்சங்களுக்காக அதிகமாக செலவழிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு.

கடன் கொடுக்கல், வாங்கலைத் தவிர்ப்பது நல்லது. மாதத்தின் முற்பாதியில் ஒரு சிலர் கண்நோயால் அவதிப்படுவார்கள். வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாய் அமையும். இக்கட்டான சூழலில் நண்பர்கள் துணைநிற்பார்கள். வீண் பழி சுமக்கும் வாய்ப்பு உண்டென்பதால் உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்களுக்கு சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நலம். கலைத்துறையினர் தொழில் முறையில் இருந்து வரும் போட்டிகளைக் கடந்து வெற்றி கண்டு வருவீர்கள். கூட்டுத்தொழில் லாபகரமாக இருந்து வரும். எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய மாதம் இது.

பரிகாரம்: காஞ்சி காமாட்சியம்மனை வழிபட்டு வாருங்கள்.

இராசியான தேதிகள்

September 2,8,9,11,22,31

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி விட்டீர்கள். இப்பொழுது சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பிரமாதமாக வாரி வழங்க போகிறார். இதுநாள்வரைபட்ட கஷ்டங்கள் பறந்து ஓடி விடும். 10,11-க்குரிய சனி பகவான், 9-ல் இருப்பதால் உத்தியோகம், தொழில் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும். வழக்கில் வெற்றி தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இத்தனை நாள் இருந்த அலைச்சல் தீரும். இனி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை உயர்ந்து நிற்க்கும். 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி தொழில் அமோகமாக இருக்கும். 6-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும். ஓரளவு கடன் தொல்லை அகலும். அதேநேரம் புதிய கடன் வாங்கச் செய்யும். ஆகவே கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து வாரி வழங்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் வழங்கி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள்.

இராசி உறவு நிலைகள்

மேஷ ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம். அவர்களுக்கு பொருந்தாத ராசிகள் – கடகம், கன்னி மற்றும் மகரம்.

சிறப்பான தொழில்

மேஷ ராசிக்காரர்கள் இலட்சியம், உறுதி, இயக்க நிலை மற்றும் வெளிப்படையாக பேசுதல் போன்றவற்றில் சிறந்து காணப்படுவார்கள். வெளியிடங்களுக்கு சென்று வருதல், ஆக்டிவாக இருப்பது போன்றவற்றில் துடிப்புடன் இருக்கும் இவர்கள் காவல், ஊடகம் போன்ற துறையில் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

செவ்வாய் கிரகத்தின் பலத்தை அதிகரிக்க மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்க வேண்டும். ஏனெனில் மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய்.

எழுதப்பட்ட நாள் .

நலம் உண்டாகட்டும்
-சுபம்-

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)