ரிஷபம் (Rishabam)

Taurusமாதாந்த இராசி பலன்கள் - 01 Oct 2018 - 31 Oct 2018

எப்பொழுதும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினை உடைய ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்திய கிரஹ நிலை முற்றிலும் ஒத்துழைக்கும். பாசிட்டிவ் எண்ணங்களைக் கொண்டிருக்கும் உங்களது செயல்கள் சுய முயற்சியினால் வெற்றி கண்டு வரும். ராசிநாதன் சுக்கிரனின் ஆட்சி பலம் உங்கள் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும். குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்புகளைக் களைய முயற்சித்து வருவீர்கள். பொருளாதார நிலையில் சற்றே ஏற்ற இறக்கமான சூழலைச் சந்திக்க நேரிடும். விருப்பமான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள்.
ஆயினும் மாதத்தின் பிற்பாதியில் அநாவசியமான பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் சந்திப்பினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வித்தரம் உயர்வடைந்து வரும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமைந்திருக்கும். முன்பின் தெரியாத நபர்களுக்கு உதவி செய்யப்போய் சற்று தர்மசங்கடத்திற்கு ஆளாக நேரிடலாம். அதே நேரத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளோருக்கு உதவி செய்வதில் மன நிம்மதி கண்டு வருவீர்கள். நண்பர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிட்டு பிரச்னையைத் தீர்க்க முற்படுவீர்கள், வாழ்க்கைத்துணையின் வேகமான செயல்பாடுகள் சற்று மன வருத்தத்தினைத் தரக்கூடும்.
இருப்பினும் அவரது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். புதிய மனிதர்களின் தொடர்புகள் தொழில்முறையில் பயனளிக்கும். சுயதொழில் செய்வோர் தங்கள் செயல்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த உரிய காலம் இது. உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் உடன் பணி செய்வோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். கலைத்துறையினர் கடுமையான போட்டியினை சந்திப்பார்கள். வாழ்வியல் தரத்தினை உயர்த்திக் கொள்ள குடும்பத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்க கால நேரம் சாதகமாக அமையும். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பரிகாரம்: சனிதோறும் ஆதியந்தபிரபுவை வணங்கி வாருங்கள்.

இராசியான தேதிகள்

September 1,3,4,6,12,14,15,18,22,25,28,30

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

அய்யோ சனி 8-ம் இடத்திற்கு வந்து விட்டதே? என்று பயப்பட வேண்டாம். ரிஷப இராசிக்கு சனி யோககாரகன். அஷ்டம சனியாக வந்தாலும் நிச்சயம் கெடுக்க மாட்டான். ரிஷப இராசிக்கு சனி தர்ம-கர்மாதிபதி. அவன் 2-ம் இடத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குழப்பங்கள் தீரும். திருமணம் தடைபட்டு இருந்தால் இனி வீட்டில் மேள சத்தம்தான். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும். தெய்வஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக பிடித்து வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8-ம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7-ம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் சனிபகவான் சந்நதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

இராசி உறவு நிலைகள்

ரிஷப ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம். ரிஷப ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – சிம்மம், தனுசு மற்றும் கும்பம்.

சிறப்பான தொழில்

ரிஷப ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கும் மனோபாவம் கொண்டுள்ளவர்கள். மேலும் நிலையான வாழ்க்கையை விரும்பும் குணம் கொண்டவர்கள். பொறியியல், கணக்காளர், கணினி சார்ந்த வேலைகள், வழக்கறிஞர், மருத்துவம் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

Rasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)