துலாம் (Thulaam)
மாதாந்த இராசி பலன்கள் - 14 Jan 2020 - 14 Feb 2020
இராசியான தேதிகள்
October
குரு பெயர்ச்சி பலன்கள்
துலாம் ராசி நேயர்களே, இது வரை 2-ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் 29-10-2019 முதல் 3-ம் இடத்திற்கு செல்கிறார். குரு 3-ம் இடத்திற்கு வருவது சிறப்பு இல்லை என்றாலும் குருவின் பார்வை பலமான இடங்களில் விழுவதால் நிச்சயமாக பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளி போகலாம். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் ஒன்று நடக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எடுத்துக்கொண்ட காரியங்கள் சாதகமாக முடியும். ஆன்மீக பணிகளில் நாட்டம் கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கடின முயற்சிக்கு பின்பே கிடைக்கும். வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. எல்லா காரியத்திலும் துணிச்சலுடன் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெருவீர்கள். மனம் யோகா, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் சிறப்பாக அமையும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் இருந்தால் சரியாகி விடும். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அடுத்தவருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பண வரவு சற்று சுமாரான நிலையில் தான் இருக்கும் என்பதால் செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத விதமாக நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உங்கள் முயற்சிகளில் ஒரு சில தடங்கல் ஏற்பட்டாலும் விட முயற்சியால் அதில் வெற்றி பெற முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாக இருக்கும். பிரிந்து இருந்த தம்பதினர் மீண்டும் ஒன்று சேருவார்கள். வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து மீள முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை அதிகரிக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் ஏற்படுவதால் பணப் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும். முக்கியமான விஷயங்களில் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே நேரிடையாக செய்வது முடிப்பது நல்லது. உத்யோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். பொதுவாக பார்க்கும் போது குரு பெயர்ச்சி பலன் தரவில்லை என்றாலும் மற்ற கிரகநிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் கவலை வேண்டாம்.இராசி உறவு நிலைகள்
துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம். துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – கடகம், மகரம் மற்றும் மீனம்.
சிறப்பான தொழில்
துலாம் ராசிக்காரர்கள் துடிப்பானவர்கள். மக்களை டீல் செய்வதில் வல்லவர்கள். வாடிக்கையாளர் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு, மேலாண்மை போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
வழிபட வேண்டிய தெய்வம்
துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.