மகரம் (Magaram)
மாதாந்த இராசி பலன்கள் - 14 Jan 2020 - 14 Feb 2020
இராசியான தேதிகள்
October
குரு பெயர்ச்சி பலன்கள்
மகர ராசி நேயர்களே, இது வரை 11-ம் வீட்டில் இருந்த குரு பகவான் 29-10-2019 முதல் 12-ம் வீட்டிற்கு செல்கிறார். (12மிடம் மறைவு ஸ்தானம்) 12-ம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். ஆகையால் அடுத்த ஒரு வருட காலம் கவனமாக இருப்பது நல்லது. புது விஷயங்கள் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் எதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம், அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பண விஷயத்தில் கூடுமானவரை யாரையும் நம்ப வேண்டாம். குடும்ப பெரியோர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டிருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகி வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவர். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நல்லபடியாக அனைத்து விஷயங்களையும் முடித்து கொடுப்பீர்கள். பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஆன்மீக சார்ந்த விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். நீண்டதொரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறுவீர்கள். புது வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். எதிர்பார்த்த காரியம் தடையின்றி முடியும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். பழைய கடன்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வர வேண்டிய பெரிய தொகை கைக்கு வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்ளுவதால் பண விரையம் ஏற்படும். பால்ய நண்பர்களுடன் சிறிய மனஸ்தாபம் வரும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். உத்யோகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். கூட்டு தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. இந்த குரு பெயர்ச்சியில் பலன் மிகவும் குறைவாக கிடைப்பதால் பொறுமையை கடைப்பிடிக்கவும்.இராசி உறவு நிலைகள்
மகர ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கன்னி, மகரம் மற்றும் மீனம். மகர ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் துலாம்.
சிறப்பான தொழில்
நேரம் கடைபிடிப்பது, பணத்தை சரியாக முதலீடு செய்வது போன்றவற்றில் மகர ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். இவர்களுக்கு ஏற்ற பணிகள், மேலாளர்கள், ஆசிரியர், வங்கி, அரசு வேலைகள், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் போன்றவை ஆகும்.
வழிபட வேண்டிய தெய்வம்
மகர ராசியை ஆளும் கிரகம் சனி. எனவே இந்த கிரகத்தின் வலிமையை சிவபெருமான் அதிகரிப்பார். ஆகவே மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.