தனுசு (Dhanusu)
மாதாந்த இராசி பலன்கள் - 14 Jan 2020 - 14 Feb 2020
இராசியான தேதிகள்
October
குரு பெயர்ச்சி பலன்கள்
தனுசு ராசி நேயர்களே, இது வரை 12-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 29-10-2019 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு செல்கிறார். ஜென்ம ராசியை குரு கடக்க போகும் குரு ஒரு வருட காலம் சிறப்பாக இருக்கும். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ஒரு விஷயமும் நீண்ட இழுபறிக்கு பின்னரே உங்களுக்கு சாதகமாக நடக்கும். குடும்பத்தில் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்ப சூழ்நிலை மனதிற்கு நிம்மதி தரும். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகள் படிப்படியாக குறையும். பொருளாதார ரீதியாக மிக பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொந்த பந்தங்களால் ஒரு சிலருக்கு டென்ஷன் ஏற்படும். உறவினர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும். வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கணவன் மனைவி உறவு வலுப்பெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். உறவினர், நண்பர்களால் அன்பு தொல்லை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பூர்விக சொத்து வகையில் ஒரு சில பிரச்சனைகள் வாய்ப்புண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். குல தெய்வ வழிபாடு மூலம் சிறப்பான பலனை பெற முடியும். கூடுமானவரை உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். புதிய திட்டங்களில் பொறுமையும், நிதானமும் தேவை. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சியில் ஜென்ம குரு சுமாரான பலன்கள் தந்தாலும் கெடுதல் எதையும் குரு பகவான் செய்ய மாட்டார்.இராசி உறவு நிலைகள்
தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், துலாம், சிம்மம் மற்றும் கும்பம். தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மீனம்.
சிறப்பான தொழில்
தீர்கமான முடிவுகளை எடுப்பதில் தனுசு ராசிக்காரர்கள் சிறந்து செயல்படுவார்கள். நல்ல எண்ணத்தை தன்னை சுற்றி இருக்கும் இடங்களில் பரப்ப செய்வார்கள். மக்கள் தொடர்பு, திரைப்படம் ஃ தெலைக்காட்சி, ஆசிரியர், போன்ற பணிகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
வழிபட வேண்டிய தெய்வம்
தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.