ரிஷபம் (Rishabam)

Taurusமாதாந்த இராசி பலன்கள் - 14 Jan 2020 - 14 Feb 2020

ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பாராத பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தைவிட சற்று குறைவாக இருக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். இது வரை சந்தித்த சோதனைகள், வேதனைகள் யாவும் விலகும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சுப காரியங்களில் எதிர்பார்த்ததை விட அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். வீடு, மனை, வாங்கும் யோகங்களும் கூடி வரும். மனசங்கடங்கள் விலகி மனதில் நிம்மதியும் உற்சாகமும் தோன்றும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். மனதில் எண்ணியதை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாகும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கும். கணவன் மனைவிடையே அனுசரணைகள் குறையும். நண்பர்களிடம் மிகுந்த கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். சந்திராஷ்டமம் : ஜனவரி 21,22,23,24 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

இராசியான தேதிகள்

October

குரு பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த குருபகவான் 29.10.2019 முதல் 8-ம் இடத்திற்கு செல்கிறார். (8-மிட குரு சற்று சிக்கல் தான்.) அஷ்டமத்தில் குரு இருந்தால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும், இருப்பினும் குருவின் பார்வை உங்கள் ராசியின் முக்கிய இடத்திற்கு கிடைப்பதால் பல நன்மைகள் நடக்கும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அடுத்தவருக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விருந்து விழா, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை சிறிய தடங்கலுக்கு பின் நிறைவேற்ற முடியும். பணம் நிமித்தமாக அலைச்சல் இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். எதிர்பாராத வகையில் பண விரையம் ஏற்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம், கவனமுடன் இருக்கவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அறிவுப்பூர்வமாக சிந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிவரும். பழைய கடன்களை நினைத்து அவ்வப்போது கலக்கம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சலும், டென்ஷனும் ஏற்படும். சொத்து வழக்குகளில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். வேண்டாதவர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளவும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்காமல் போகலாம். வாகன வசதிகள் பெருகும். புது வீட்டிற்கு குடியேற முடியும். வேற்று மதத்தினரின் உதவியும் ஆதரவும், கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் தொழில், வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். இந்த குரு பெயர்ச்சியில் ஆரம்பத்தில் நிறைய தடைகளை சந்தித்தாலும் நாளடைவில் நல்லது நடக்க ஆரம்பிக்கும் என்பது உன்மை

இராசி உறவு நிலைகள்

ரிஷப ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம். ரிஷப ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – சிம்மம், தனுசு மற்றும் கும்பம்.

சிறப்பான தொழில்

ரிஷப ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கும் மனோபாவம் கொண்டுள்ளவர்கள். மேலும் நிலையான வாழ்க்கையை விரும்பும் குணம் கொண்டவர்கள். பொறியியல், கணக்காளர், கணினி சார்ந்த வேலைகள், வழக்கறிஞர், மருத்துவம் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்

ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

Rasi Palan 2019 (இன்றைய ராசி பலன்)